சென்னை:
சென்னை நகைக்கடை கொள்ளை வழக்கில், கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்த மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப் பட்டார்.
இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க வெளி மாநிலத்துக்கு சென்ற தனது கணவருடன் இரண்டு பேர் மட்டுமே சென்றதாக பெரிய பாண்டியன் மனைவி தெரிவித்தார். குறைந்த அளவிலான காவலர்கள் சென்றதாலேயே தனது கணவர் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், கூடுதல் காவலர்களை உடன் அனுப்பியிருந்தால், தனது கணவர் காப்பாற்றப்பட்டிருப்பார் என கூறினார்.
தினசரி காலையில் தன்னை போன் வாயிலாக எழுப்பும் தனது கணவர் இன்று காலை போன் செய்யாதது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது… இனிமேல் அவர் போன் செய்யமாட்டார் என்று கூறி அழுதார்.
இன்று காலை பெரிய பாண்டியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற சென்னை மாநகர ஆணையர் விஸ்வநாதனிடம் பெரிய பாண்டியின் மனைவி பானுரேகா இதை தெரிவித்தார்.