டில்லி:
வரும் 31ம் தேதிக்குள் ஆதார் இணைக்காத வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.

வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது தொடர்பான வழக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க மார்ச் 31ம் தேதி வரையில் அவகாசம் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆதாருடன் பான் கார்டு இணைக்கவும் மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
எனினும் ஆதார் வழங்கும் தனித்துவ அடையாள ஆணைய அதிகாரிகள், வங்கிக் கணக்குடன் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் என அறிவித்துள்ளனர். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]