சென்னை:

ஒகி புயலில் பாதித்த கன்னியாகுமரி மீனவர்களை காப்பாற்ற தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணி சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

காலை 10.30 மணிக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர்அணி தலைவர் கஜநாதன் தலைமை வகிக்கிறார்.

காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசுகிறார். இதில் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள், இன்னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள்.

மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அனைத்து பிரிவு தலைவர்கள் கலந்துகொள்கின்றனர் என்று காங்கிரஸ் கட்சியின் ஊடக துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.