
புதுச்சேரி,
புதுச்சேரி அருகே உள்ள மசூதி ஒன்றில் புகுந்த சமூக விரோதிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த குரானை கிழித்து சூறையாடி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுவை முதல்வர் நாராயணசாமி சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.
புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள உள்ளது முவஹிதியா பள்ளி வாசல். இங்கு சம்பவத்தன்று இரவு சில சமூக விரோதிகள் நுழைந்து குர்ஆனை கிழித்தும் மற்றும் இதர பொருட்களையும் உடைத்து சேதப்படுத்திருக்கிறார்கள்.

மறுநாள் காலை பள்ளி வாசலை திறந்தவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான இஸ்லாமியர்களும் பள்ளிவாசல் பகுதியில் திரண்டனர். இதன் காரணமாக பதட்டமான சூழல் உருவானது.
இதுகுறித்த தகவல்கள் புதுச்சேரி முதல்வருக்கு தெரியபடுத்தப்பட்டது. உடனே அவர், முவஹிதியா பள்ளிவாசல் விரைந்து வந்து பார்வையிட்டு, இஸ்லாமியர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை உடனே பிடிக்குமாறு காவல்துறைக்கும் உத்தரவிட்டார்.
[youtube-feed feed=1]