மும்பை,

ன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்ட ஓகி புயல் காரணமாக, அம்மாவட்ட மீனவர்கள் பல் பலியான நிலையில் ஏராளமானோர் பல இடங்களில் கரை ஒதுங்கினர்.

இந்நிலையில், மகாராஷ்ட்ராவில் கரை ஒதுங்கிய 763 தமிழக மீனவர்கள் இன்று தமிழகம் திரும்புகின்றனர். அவர்கள் தமிழகம் திரும்ப தேவையான உதவிகளை தமிழக அரசு செய்துள்ளது.

கடந்த வாரம் வங்க கடலில் உருவான ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் இதுவரை  கரை திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கடல் கொந்தளிப்பு காரணமாக, கடலுக்கு சென்ற மீனவர்கள் பல மாநிலங்களில் கரை ஒதுங்கினர். மேலும், காணாமல் போனவர்களை கடற்படையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், 763 தமிழக மீனவர்கள் மகாராஷ்டிராவில் கரை ஒதுங்கியதாக அம்மாநில முதல் அமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் அறிவித்திருந்தார்.

அவர்கள் போதிய உதவியின்றி தவித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, மீனவர்களுக்கு உதவித்தொகையை தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் தமிழக அரசு வழங்கிய டீசல், உணவு, மற்றும் உதவித்தொகையை பெற்றுக் கொண்டுள்ள தமிழக மீனவர்கள் நேற்று தமிழகம் நோக்கி புறப்பட்டனர். அவர் இன்று தமிழகம் வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.