
புதுச்சேரி,
தனியார் மருத்துவக்கல்லூரிகளில் விதிகளை மீறி சேர்க்கப்பட்ட 105 மருத்துவ மாணவர்களை நீக்கி அகில இந்திய மருத்துவ கழகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கவர்னர் கிரண்பேடி புகார் கூறி இருந்தார். இதுகுறித்து, அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், சிபிஐக்கும் கடிதம் எழுதி இருந்தார்.
இதன்படி கடந்த செப்டம்பர் மாதம், 2016-17 ம் ஆண்டு விதிகள் மீறி சேர்க்கப்பட்டதாக, 770 மாணவர்களை வெளியேற்ற இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து வழக்குகளும் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், புதுவை அரசு, மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிக்கையை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பியது. அதை ஆய்வு செய்த இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக 3 மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டதை உறுதி செய்தது.
அதையடுத்து, விதிகளை மீறி சேர்க்கப்பட்ட 105 எம்.பி.பி.எஸ். மாணவர்களை நீக்க உடடினயாக உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியில்-41 மாணவர்களும், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில்-38 மாணவர்களும், பிம்ஸ் மருத்துவ கல்லூரியில்-26 மாணவர்கள் என மொத்தம் 105 மாணவர்கள் தங்களின் படிப்பை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ கவுன்சிலின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக மருத்துவம் படித்து எம்.பி.பி.எஸ். மாணவர்கள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
[youtube-feed feed=1]