சென்னை:
ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், ‘‘ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப போதுமான நிதியுதவி வழங்க வேண்டும்.
ஒகி புயல் பாதிப்புக்குள்ளான குமரியில் மின் கட்டமைப்பு, விவசாயம், சாலை போக்குவரத்து போன்றவை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அரேபியா, குஜராத், மாலத்தீவு பகுதிகளில் காணாமல் போன தமிழக மீனவர்களை தேடும் பணியை தொடர ராணுவ அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel