டில்லி:

நித்யானந்தாவுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கை இனியும் தாமதிக்கால் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து விரைந்து விசாரிக்க வேண்டம் கர்நாடகா நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தா ஆசிரமத்தின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் என்பவர் கடந்த 2010ம் ஆண்டில் சென்னை போலீசில் ஒரு புகார் அளித்தார். இதன் பேரில் பாலியல் துன்புறுத்தல், பாலியல் பலாத்காரம், மோசடி வழ க்குகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கர்நாடகா மாநிலம் ராமநகரா போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை ராமநகரா மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் நித்யானந்தா 2 முறை கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் செயலில் நித்யானந்தா ஈடுபட்டு வந்ததாக புகார் கூறப்பட்டது.

இந்த வழக்கில் தான் ஆண்மையற்றவர் என்று தனியார் மருத்துவமனை பரிசோதனை அறிக்கையை நித்ய £னந்தா சமர்ப்பித்தார். பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் முறைப்படி பரிசோதனை மேற்கெ £ண்டதில் அவர் ஆண்மை தன்மை உள்ளவர் என்பது தெரியவந்தது. ரஞ்சிதாவுடன் இருந்த வீடியோ க £ட்சிகள் போலி என்று அவர் வாதிட்டார்.

நீதிமன்றத்தில் விசாரணையை தாமதப்படுத்த புது புது ஆவணங்களை ஆதாரங்களாக நித்யானந்தா தரப்பு வக்கீல்கள் சமர்ப்பித்தினர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது.

அப்போது நீதிபதி கூறுகையில், ‘‘அரசு தரப்பில் குற்றப் பத்திரிக்கையில் தெரிவித்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் ராமநகரா அமர்வு நீதிமன்றம் விசாரணையை தொடர வேண்டும். தொடர்பு இல்லாத ஆவணங்களை எதிர் தரப்பினர் தாக்கல் செய்தால் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் நித்யானந்தா மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த வேண்டும். இனியும் தாமதப்படுத்தாமல் குற்றச்சாட் டுக்களை பதிவு விரைந்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை ராமநகரா நீதிமன்றத்தில் ஜனவரி 2ம் தேதி நடக்கிறது.