
சென்னை
அசோக் குமார் தற்கொலை தொடர்பாக இன்று சசிகுமாரிடம் விசாரணை நடைபெறுகிறது.
நடிகரும் இயக்குனருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்டார். அவர் தனது மரணத்திற்கு கந்துவட்டிக்காரர் அன்புச் செழியன் தான் காரணம் என கடிதம் எழுது வைத்துள்ளார். போலீசார் அன்புச் செழியனை தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அன்பு தற்போது முன் ஜாமீன் கேட்டு மீண்டும் மனு அளித்துள்ளார்.
இது குறித்து சசிகுமார் உட்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர் அசோக் குமார் தற்கொலை வழக்கை விசாரித்து வரும் தி நகர் டெபுடி கமிஷனர் அரவிந்தனை இன்று சசிகுமார் சந்திக்க உள்ளார். இந்த வழக்கு குறித்து கூடுதல் விசாரணைக்காக சசிகுமார் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel