
சென்னை
சன் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிமேகலை குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி தனது காதலர் ஹுசைன் என்பவரை பதிவுத் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சியான சன் டிவியில் வி ஜே வாக பணி புரிபவர் மணிமேகலை. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கும் ஹுசைன் என்பவருக்கும் நீண்ட காலமாக காதல் உள்ளது. இவர்களின் திருமணத்துக்கு மணிமேகலையின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இன்று மணிமேகலை குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி ஹுசைனை பதிவுத் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிந்துள்ளார். அதில், “இன்று எனக்கும் ஹுசைனுக்கும் பதிவுத் திருமணம் நடந்துள்ளது. என்னால் என் தந்தையை இந்த விஷயத்தில் சமாதானம் செய்ய இயலவில்லை. நிலைமை எனது கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால் இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம். என் தந்தையும் விரைவில் புரிந்துக் கொள்வார். காதலுக்கு மதம் இல்லை. நான் ஹுசைனை காதலிக்கிறேன். ஸ்ரீராமஜெயம். அல்லா ஹு அக்பர்” என பதிந்துள்ளார்.
[youtube-feed feed=1]