சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிய இருப்பதால், அனைத்து அரசியல் கட்சியினரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முயற்சித்து வருகின்றனர்.

இன்று பிற்பகல் 1 மணி அளவில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், தி.மு.க வேட்பாளர் மருதுகணேசும்  இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.

இந்நிலையில்,  ஆர்.கே.நகரில் அ.தி.மு.க, திமுக, டிடிவி தினகரன், தீபா உள்பட10க்கும் மேற்பட்டோர் போட்டியிடுன்றனர்.