ஷர்துல்                                                                                         சச்சின்

மும்பை

ச்சினுக்கு மரியாதை தரும் விதமாக 10ஆம் எண்ணுள்ள சட்டை யாருக்கும் தரப்பட மாட்டாது என பி சி சி ஐ அறிவித்துள்ளது.

சச்சினின் முழுப்பெயர் சச்சின் டெண்டுல்கர் என்பதால் அவர் கிரிக்கெட் போட்டிகளின் போது பத்து (ten)  என பொறிக்கப்பட்ட சட்டையையே தேர்வு செய்வார்.  அவருடைய ரசிகர்களும் இதை மிகவும் விரும்பி வந்தனர்.    எனவே அது சச்சினின் பிரத்யேக எண்ணாகவ்வே மாறியது.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த கிரிக்கெட் போட்டியில் ஷர்துல் தாகுர் அறிமுகமானார்.   அவருக்கு சச்சினின் பிரத்யேக எண்ணான 10 எனும் எண்ணை பி சி சி ஐ ஒதுக்கவே அவர் அந்த எண் கொண்ட சட்டையை அணிந்திருந்தார்.  இதற்கு சச்சின் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்து அவர்கள் பி சி சி ஐ க்கு இந்த எண்ணை வேறொருவருக்கு ஒதுக்கக் கூடாது என தெரிவித்தனர்.

ஆனால் கிரிக்கெட் வீரர்களில் சிலர் ஷர்துலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.   ஷர்துல் இது பற்றி “எனது பிறந்த தினத்தின் கூட்டுத் தொகை பத்து என்பதால் அந்த எண்ணை நான் தேர்ந்தெடுத்தேன்” எனக் கூறினார்.   ஆனாலும் அவர் அந்த எண்ணை தவிர்த்துள்ளார்.  அக்டோபரில் மீண்டும் தேர்வான போது பயிற்சி ஆட்டங்களில் அவர் 54 என எண் பொறிக்கப்பட்ட சட்டையை அனிந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பி சி சி ஐ வாய் மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.  அதன்படி “இனி 10 என்னும் எண் எந்த கிரிக்கெட் வீரருக்கும் அளிக்கப்படப் போவதில்லை.  அந்த எண் கொண்ட சட்டையை எந்த ஒரு சர்வதேசப் போட்டிகளிலும் யாரும் பயன் படுத்தக் கூடாது.  அந்த எண் உள்ள சட்டையை அணிந்து சர்வ தேசப் போட்டிகளில் கலந்துக் கொண்டால் சர்ச்சைகள் உருவாகிறது.   அத்துடன் சச்சினுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அந்த எண்ணை பயன்படுத்த மாட்டோம் என கிரிக்கெட் வீரர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.