சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக மருதுகணேஷ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை திமு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக மருதுகணேஷ் மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர். அந்த பகுதி திமுக பகுதி செயலாளராக இருக்கிறார்.
திமுக வேட்பாளர் குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, ஏற்கனவே போட்டியிட்ட மருது கணேஷையே மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.