
கவுகாத்தி:
பாவம் செய்தால் புற்று நோய் வரும் என பா.ஜ.க.வைச் சேர்ந்த அசாம் மாநில பா சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமன்ட பிஸ்வா சர்மா பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
கவுகாத்தியில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசினார். அப்போது, ‛‛ கடவுள் நாம் செய்த பாவங்களுக்காக நம்மை தண்டிப்பார். மிக இளைவயதிலேயே பலருக்கு புற்று நோய் வருவதைப் பார்த்திருக்கிறோம். இள வயதினர் விபத்துக்களில் சிக்குவதையும் பார்த்திருக்கிறோம். நீங்கள் அவர்களிடம் கடந்த காலத்தை பார்த்தால் அவர்கள் செய்த பாவத்திற்கான தண்டனையாகவே அவை அமைந்திருக்கும். வேறு ஒன்றும் இல்லை. நாம் செய்த பாவங்களுக்கான தண்டனையை நாம் பெற்றே ஆக வேண்டும். ” என்று பேசினார்.
இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel