லக்னோ,

.பி.யில் உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது வாக்கை பதிவு செய்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 3 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி  முதல்கட்ட தேர்தல் இன்று ( நவ.22-ம் தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது கட்ட தேர்தல்  நவ.26-ம் தேதியும், 3-வத கட்ட தேர்தல் வரும்  29-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்த வாக்குப்பதிவு முடிவுகள் அனைத்தும்  டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் வாக்குச்சாவடியில் தனது வாக்குப்பதிவை செலுத்தினார்.