ர்பன்

தென் ஆஃபிரிக்க நாட்டின்  இந்திய தூதரக அதிகாரி ஜெனரல் சஷான்க் விக்ரம்.  இவர் தனது குடும்பத்தினருடன் டர்பன் நகரில் வசித்து வருகிறார்.  கடந்த சனிக்கிழமை அன்று இவருடைய இல்லத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.  அவர்கள் துப்பாக்கி முனையில் சஷான்க் விக்ரமின் குடும்பத்தை அவர் இல்லத்தினுள் சிறை வைத்துள்ளனர்.  சிறை வைக்கப்பட்டவர்களில் அவரிடைய ஐந்து வயது மகன், அவர் வீட்டுப் பணியாளர் மற்றும் ஒரு ஆசிரியரும் அடங்குவார்கள்.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், “நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து விவாதித்து தக்க நடவடிக்கை எடுக்க வைத்துள்ளோம்.  விரைவில் அவர்கள் மீட்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.   தவிர அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த விவகாரத்தில் முழு ஈடுபாட்டுடன் உள்ளதாகவும் தக்க நடவடிக்கை எடுக்க உதவி வருவதாகவும் கூறினார்.

தென் ஆஃப்ரிக்கா போலீசார் கடத்தல்காரர்கள வளைத்துப் பிடிப்பதில் தீவிரமாக உள்ளனர் எனவும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் மற்றொரு தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.  மேலும் யாரையும் கடத்தல்காரர்கள் தாக்கவில்லை எனவும் விக்ரமின் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலில் உள்ளதால் அவர்களை மீட்டதும் அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.