
டில்லி
இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள். இதையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளனர்.
மறைந்த இந்திரா காந்தியின் பேரனும், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய துணைத் தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “அன்புள்ள பாட்டி, நான் உங்களை அன்புடனும் மன சந்தோஷத்துடனும் நினைவு கூருகிறேன். நீங்கள் தான் எனக்கு குருவும் வழிகாட்டியும். நீங்கள் தான் எனக்கு சக்தியை அளிக்கிறீர்கள்” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பொதுமக்களும், பிரபலங்களும் தங்களின் பாராட்டுதலை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel