கொச்சி:

உலகிலேயே சுகாதாரமற்ற முறையில் இயற்கை உபாதைகளை கழிப்பவர்களில் அதிகம் பேர் வாழ்வது இந்தியாவில்தான் என்றும் நாடு முழுதும் நாடு முழுவதும், 73 கோடி பேர், இப்படி சுகாதாரமற்ற இடங்களில், இயற்கை உபாதைகள் கழிப்பதாகவும் அதிர்ச்சிகர ஆய்வு வெளியாகியிருக்கறது.

மேலும், கழிப்பறை வசதி இல்லாததால், 35 கோடி பெண்கள், பாதுகாப்பற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிப்பதாகவும், அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வாட்டர் எய்டு’ எனப்படும், சர்வதேச தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்தான் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், “உலகம் முழுவதும், 110 கோடி பேர், சுகாதாரமற்ற கழிப்பிடங்களை பயன்படுத்துகின்றனர். நீர் பற்றாக்குறை, குறைவான இட வசதி, மக்கள் நெருக்கடி போன்ற பல காரணங்களால் இந்த அவலம் நீடிக்கிறது.”  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனிநபர் சுகாதாரம் மற்றும் கழிப்பறை பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பல தகவல்கள் கிடைத்துள்ளன.உலக மக்கள் தொகையில், இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில்தான், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவோர் அதிகம் இருக்கிறார்கள்.

சுகாதாரமற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிப்போர் எண்ணிக்கையில், உலக அளவில், இந்தியா முதல் இடம் வகிக்கிறது.

இந்தியாவில், 73 கோடி பேர், சுகாதாரமற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இவர்களில் 35 கோடி பேர் பெண்கள். இவர்கள், திறந்தவெளியில், சுகாதாரமற்ற முறையில், இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.

உலக மக்கள் தொகையில், முதலிடம் வகிக்கும் சீனா, சுகாதாரமற்ற கழிப்பறை பயன்பாட்டில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

சீனாவில்,  34 கோடி பேர், சுகாதாரமற்ற கழிப்பிடங்களை பயன்படுத்துகின்றனர். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா, மூன்றாம் இடத்தில் உள்ளது” என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.