சென்னை:
வி.கே. சசிகலா குடும்பத்தினர் ஒவ்வாருவராக சிறை தண்டனை பெற்று வருவது குறித்து பாஜகவின் எச் ராஜா, “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, வி.என். சுதாரன் ஆகியோர் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போல சசி உறவினர் பாஸ்கரனுக்கும் சொத்துக்கவிப்பு (வேறு) வழக்கில் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய பாஸ்கரன் வருமானத்தை விட அதிகமாக ரூ.1.68 கோடி சேர்த்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்த வழக்கில் இந்த்த் தீர்ப்பு அளிக்கப்ட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஸ்கரன் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது. பாஸ்கரனின் மனைவி ஸ்ரீதலாவுக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிதது.
இந்த நிலையில் வரி ஏய்ப்பு புகாரில் சசிகலா கணவர் நடராஜனுக்கு இரண்டு வருடங்கள் சிறை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதுகுறித்து பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா சசிகலா குடும்பத்தினர் சிறை தண்டனை பெறுவது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள், தினகரன் சகோதரி சீத்தலா விற்கும் 3 ஆண்டுகள், அவரது கணவர் பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று தனது ட்விட்டர் பதிவில் எச். ராஜா தெரிவித்துள்ளார்.