ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை அம்பானி குடும்பத்தினர் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
பிரபல பத்திரிகையான போபர்ஸ் ஒவ்வொரு ஆண்டும் உலக கோடீசுவரர்கள், உலகின் சக்தி மிக்கவர்கள் யார் என்பது குறித்த பட்டியலை வெளியிடும்.
இந்த பத்திரிகை தற்போது வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில், முதல் 10பேரில் ஒருவராக முகேஷ் அம்பானியும், ஆசிய பணக்காரர்களின் முதல் இடத்தை முகேஷ் அம்பானி குடும்பம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 680 கோடி ரூபாய் என கணக்கிட்டுள்ளது.
முதல் இடத்தை பெற்றுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.1,25,400 கோடியில் இருந்து 2,95,680 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில், தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் எலெட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லீ குடும்பத்தின் சொத்து ரூ.73,920 கோடி ரூபாயில் இருந்து 2,69,280 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மூன்றாவது இடத்தில், ஹாங்காங்கை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவோக் குடும்பத்தின் சொத்து மதிப்பு 2,66,640 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நான்காவது இடத்தில் தாய்லாந்தின் சரோவனோட் குடும்பத்தின் சொத்து மதிப்பு 2,41,560 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலில் முதல் பத்து இடத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து மேலும் பல இந்தியர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.