ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைப்பது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த (2017) வருடம் பிப்ரவரி 6 ம் தேதி உத்தரவிட்டது. இதற்கு ஒரு வருட அவகாசமும் அளித்தது. அதாவது, வரும் அடுத்த (2018) வருடம் பிப்ரவரி 6ஆம் தேதிக்கும் இப்படி இணைத்துவிட வேண்டும்.
இந்த நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆதார் மற்றும் மொபைல் எண் இணைப்புக்கு மூன்று விதமான வழிகளை ஆதார் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.
இதற்கு ஆதார் ஆணையம் கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்துவிட்டது. வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மூன்று எளிய வழிகளில் ஆதார் எண்ணையும் மொபைல் எண்ணையும் இணைக்கலாம்.
முதல் வழி ஓ.டி.பி. எனப்படும் எஸ்.எம்.எஸ். மூலம் வரும் தற்காலிக குறியீட்டு எண் மூலம் இணைப்பது.. இரண்டாவது வழி மொபைல் அப்ளிகேஷன் மூலம் இணைப்பது… மூன்றாவது வழி ஐ.வி.ஆர்.எஸ். எனப்படும் போன் அழைப்பில் குரல் பதிவின் வழிகாட்டலை பின்பற்றி இணைப்பது.
இந்த முன்று முறைகளில் ஏதேனும் ஒரு வழியல் உங்கள் ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைக்கலாம்.
ஆனாலும் அந்தந்த மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களின் கடைகளுக்குச் சென்று இணைப்பை உறுதிப்படுத்துக்கொள்வது அவசியம்… அவசியம்.