ஞ்ஜிம்

கோவா முதல்வர் மாணவர்களிடம் தாம் அடல்ட்ஸ் ஒன்லி படம் பார்த்த அனுபவங்க்ளை தெரிவித்துள்ளார்.

கோவாவில் நேற்று குழந்தைகள் தின நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு மாணவர்களுடன் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உரையாற்றினார்.   அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளித்தார்.   அவரிடம், “நீங்கள் சிறு வயதில் விரும்பிப் பார்த்த படம் எது?  எந்த மாதிரியான படங்களை பார்பீர்கள்” என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “நாங்கள் வெறும் படங்கள் மட்டும் அல்ல, அப்போது வெளியான அடல்ட்ஸ் ஒன்லி படங்களையும் பார்த்துள்ளோம்.   ஆனால் நாங்கள் அடல்ட்ஸ் ஒன்லியில் பார்த்தவைகளை விட இப்போது நீங்கள் தொலைக்காட்சியில் நிறைய பார்க்கிறீர்கள்.    அப்போது ஒரு புகழ்பெற்ற அடல்ட்ஸ் ஒன்லி படம் வந்தது.    நான் அப்போது பெரிய பையன் தான்.  நானும் என் சகோதரர் அவதூத் இருவரும் அந்தப் படத்துக்கு போயிருந்தோம்.   இடைவேளையில் விளக்கு எரிந்ததும் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தார்.   செத்தோம் என நினைத்துக் கொண்டு இருவரும் தியேட்டரை விட்டு வெளியே வந்தோம்.

வழியில் என்ன சொல்வது என யோசித்துக் கொண்டே சென்றோம்.     அவர் எங்கள் தாயாரிடம் வழக்கமாக பேசுவார்.   வீட்டுக்கு சென்றதும் நான் என் தாயாரிடம் நாங்கள் அன்று ஒரு தவறான ஒரு படத்துக்கு போய் விட்டோம்.   ரொம்ப அசிங்கமாக இருந்தது.   அதனால் நாங்கள் பாதியில் வந்து விட்டோம் என சொல்லி விட்டு  நம்ம பக்கத்து வீட்டு அங்கிள் கூட அந்த படத்துக்கு வந்திருந்தார் என சொல்லி விட்டோம்

அடுத்த நாள் அவர் என் தாயாரிடம் மனோகரும் அவதூத்தும் அடல்ட்ஸ் ஒன்லி படத்துக்கு போறாங்க என புகார் செய்தார்.  ஆனால் என் தாய் அதை அவர்கள் சொல்லி விட்டனர்.   ஆனால் இந்த வயதுக்கு நீங்க ஏன் அந்த படம் போனீங்க என அவரைக் கேட்டுவிட்டார்.    எல்லாவற்றிலும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என நகைப்புக்கிடையே தெரிவித்தார்.