கோவை மாவட்ட வளர்ச்சி பணிகளை ஆளுனர் ஆய்வு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சிபிஎம் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்திருப்பதாவது..

தமிழக ஆளுநர் கோவை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பது வரம்பு மீறிய செயலாகும். அரசு விழாக்களில், பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநர்கள் பங்கெடுப்பது சாதாரணமான ஒன்றுதான்.
ஆனால் கோவை மாவட்டத்தில், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை அழைத்து, திட்டங்கள் அமலாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தியிருப்பது, வரம்பு மீறிய செயலாகும். பாஜகவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட கைப்பாவையாகத்தான் மாநில அரசு செயல்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டுவதாக இந்தச் செயல் அமைந்திருக்கிறது.
Patrikai.com official YouTube Channel