
சென்னை:
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (திங்கட் கிழமை – நவம்ப்ர – ,13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் நேற்று இரவு, 8:00 மணி முதல், ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக பல இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் விடிய விடிய மழை பெய்தது.
இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel