விஜயவாடா

விஜயவாடா அருகே கிருஷ்ணா ஆற்றில் படகு விபத்தில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே உள்ளது இப்ராஹிம் பட்டினம் மண்டல் என்னும் சுற்றுலாத்தலம்.   இங்குள்ள கோயிலுக்கு மக்கள் ஆற்றை படகு மூலம் கடந்து செல்வது வழக்கம்.   அது போல இன்று 30 பேருக்கும் மேல் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.   அதிக பாரம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 11 பேர் ஆற்றில் மூழ்கி மரணம் அடைந்துள்ளனர்.  அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.    மேலும் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.   மேலும் சிலர் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.   மூழ்கியவர்களைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.    உயிரிழந்தவர்கள், மற்றும் மீட்கப்பட்டவர்கள் சுற்றுலாப் பயணிகள் என அறியப்படுகிறது.