சென்னை:
“ஜெயலலிதா இருக்கும்போதே ரெய்டு நடத்தியிருந்தால் இப்போது கிடைத்ததை விட இன்னும் அதிகமாக கிடைத்திருக்கும்” என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், தற்போது வி.கே.சசிகலா குடும்பத்தை குறிவைத்து நடக்கும் வருமானவரி சோதனை குறித்து தெரிவித்தார்.
அப்போது அவர், “ஒரு அணியை 10 அணியாக பிரித்துவிட்டு ஒரு அணியில் மட்டும் வருமானவரி சோதனை நடக்கிறது. அதிமுக வாக்கு வங்கியை பாஜக கையகப்படுத்த முனைகிறது. ஆனால் பிரதமர் மோடியின் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக உள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும், ““ஜெயலலிதா இருக்கும்போதே ரெய்டு நடத்தியிருந்தால் இப்போது கிடைத்ததை விட இன்னும் அதிகமாக கிடைத்திருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.