திருப்பூர்
பணமதிப்புக் குறைப்புக்குப் பின் திருப்பூரில் பல ஜவுளித் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன
திருப்பூர் என்றாலே ஜவுளிகள், முக்கியமாக பின்னலாடைகள்தான் நினைவுக்கு வரும். பின்னலாடைகள் அதிகம் ஏற்றுமதி செய்யும் நகராக திருப்பூர் திகழ்ந்து வருகின்றது. ஆனால் பண மதிப்புக் குறைப்பு நடவடிக்கைக்குப் பின்னும் ஜி எஸ் டி அமுலாக்கத்தின் பிறகு பல பின்னலாடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கதை இதோ:
திருப்பூர் பஸ் நிலையம் அருகே பின்னலாடை தைக்கும் சிறு தொழிற்சாலை ஒன்றை ராமதாஸ் என்பவ நடத்தி வந்தார். 20 வருடங்களாக இந்தத் தொழிலை நடத்தி வரும் ராமதாஸ் 15 பெண்களை பணிக்கு அமர்த்தி ரூ.20000 – 25000 வருமானம் ஈட்டி வந்தார். ஆனால் தற்போது அவரும் அவர் மனைவியும் மட்டுமே பணி புரிந்து கடந்த இரு வாரங்களில் வேறும் 2000 ரூபாய் வருமானம் மட்டுமே ஈட்டி உள்ளனர்.
இது போல பல ராமதாஸ்கள் திருப்பூரில் துயர் அடைந்து வருகின்றனர். ரூ.42000 கோடி வர்த்தகம் நடைபெற்ற திருப்பூரில் தற்போது பல தொழிற்சாலைகள் நலைவடைந்து வருகின்றன. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சஙக்த் தலைவர் ராஜா சண்முகம் தனது கவலையை தெரிவித்துள்ளார்.
ராஜா சண்முகம், “பிரதமரின் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை மிகவும் அருமையான ஒரு நடவடிக்கை என்பதை நான் நம்புகிறேன். நாங்கள் எந்த ஒரு துன்பத்தையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். ஆனால் தற்போது இந்த தொழில் முழுவதுமாக அழிந்து வருகிறது. இந்த தொழில் அழிக்கப்பட்டால் நாங்கள் மீளவே முடியாது. இதே ஏற்றுமதி வர்த்தகத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கடந்த வருடம் 10%-11% லாபம் ஈட்டி உள்ளனர்.” எனக் கூறி உள்ளார்.
திருப்பூரில் உள்ள 8500 தொழிற்கூடங்களில் சுமார் 70% சிறிய மற்றும் நடுத்தர தொழிற் கூடங்கள் ஆகும்.