டில்லி,

த்திய அரசு பண மதிப்பிழப்பு அமல்படுத்தி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று கருப்பு தினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியோ, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நாட்டைப் பீடித்திருந்த கருப்புப் பண நோய் குணப்படுத்தப்பட்டிருப்பதாக கூறி உள்ளார்.

எதிர்க்கட்சிகள் இன்றைய தினத்தை கருப்பு தினமாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டட இன்றைய தினத்தை கருப்புப் பண ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி,

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டை மேம்படுத்தும் நேர்மையான நடவடிக்கை என்றும், பணமதிப்பிழப்பு காரணமாகவே கருப்புப் பண நோய் குணப்படுத்தப்பட்டது என்றும் கூறி உள்ளார்.

மேலும்,  காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2ஜி, காமன்வெல்த் மற்றும் நிலக்கரி சுரங்க முறைகேடு  போன்று கொள்ளையடிக்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்றும்  கடுமையாக குறை கூறினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதார வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்த தருணம் என்றும், இதன் காரணமாக வரி செலுத்தும் தனிநபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அடுத்த தலைமுறையினர் நேர்மையும், கவுரவமும் மிக்க வாழ்வை நடத்துவதற்கான ஆரோக்கியமான சூழல் உருவாக இது வழிவகுக்கும் எனவும் ஜேட்லி தெரிவித்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் எதிரொலியாக 2 லட்சத்து 97 ஆயிரம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் 2 லட்சத்து 24 ஆயிரம் நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காடினார்.

இந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்ட ரீதியான கொள்ளை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடுமையாக விமர்சித்துள்ளா