சென்னை,
நடிகர் கமலஹாசனின் பிறந்த நாள் இன்று. இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று அறிவித்துள்ள அவர், தனது டுவிட்டர் பதிவில் தனது பிறந்தநாளை யொட்டி புதுயுகம் செய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.
அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர் கமலஹாசன், அவரது பிறந்தநாள் அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், வேளை வரும் என காத்திருக்காமல் புதுயுகம் செய்வோம் என நடிகர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் நடிகர் கமல்ஹாசன் இந்த ஆண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனத டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
நாளை என்பது மற்றொரு நாளே. வேலை கிடக்குது ஆயிரம் இங்கே. கோலையுங்குடியையும் உயரச் செய்வோம். வேளை வரும் என காத்திருக்காது காலையிலேயே புதுயுகம் செய்வோம் என பதிவிட்டுள்ளார்.