சென்னை,

சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் தொடர் மழை காரணமாக சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கிஉள்ளது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் சென்றுள்ளது.

இதன் காரணமாக சென்னையில்  112 இடங்களில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு, சென்னையே தண்ணீரில் மிதந்து வருகிறது.

அனைத்து சாலைகளிலும்  மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது.  இதன் காரணமாக மின்சாரம் காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கொடுங்கையூர் பகுதியில் இரண்டு சிறுமிகள் மின்சாரம் தாங்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து முன் எச்சரிக்கையாக மழை நீர் தேங்கி உள்ள 112 பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில், அடையாறு, கோட்டூர்புரம், மந்தைவெளி உள்பட வட சென்னையில் பெரும்பாலான பகுதிகள் உள்பட  112 இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜங்சன் பாக்ஸ் வரை நீர் தேங்க ஆரம்பித்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.