மும்பை:

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன்னாள் ராணுவ வீர்ர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மும்பையில் இருக்கும் எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தில் நடைபாதை பாலம் அமைக்கும் பணி நடந்தவருகிறது.  இதற்காக மும்பையில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு சொந்தமான மும்பை பொறியாளர்கள் குழுவில் இருந்து ராணுவ வீரர்கள் வரவழைக்க படுவார்க்ள என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.

ராணுவ வீர்ர்கள்  அவசர கால பணிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும்  இது போன்ற வழக்கமான பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்றும் முன்னாள் ராணுவ்வீர்ர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரம்  நிர்மலா சீதாராமினின் இந்த கருத்துக்கு தற்போது பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பணியில் இருக்கும்போது அரசு உத்தரவுகளை எதிர்த்து பேசக்கூடாது என்பதால் அவர்கள் அமைதியாக இருப்பதாகவும் முன்னாள் ராணுவத்தினர் சிலர் தெரிவித்தார்கள்.

மேலும் அவர்கள் வேலை செய்யும் காலத்தில் நாங்கள் சரியாக நடத்தப்படுவதில்லை, வேலையில் இருந்து ஒய்வு பெற்ற பின்பும் தங்கள் சரியாக நடத்தப்படுவதில்லை என்று கூறியிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் லெப்டினென்ட் ஜெனரல் பூரி, ”ராணுவத்தினரை  நேர்மையாக நடத்த வேண்டும். எல்லா வேலைக்கும் அவர்களை அழைக்க கூடாது. நாட்டில் ஏதாவது அவசரம் ஏற்பட்டால் மட்டுமே ராணுவம் அழைக்கப்பட வேன்டும்” என்று  தெரிவித்துள்ளார்.

அதேபோல் ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் லெப்டினென்ட் ஜெனரல் பக்சி,” ராணுவம் நாட்டில் எப்போது கடைசியாகத்தான் பயன்படுத்தப்பட வேண்டும். இது போன்ற பாலம் காட்டும் வேளையில் எல்லாம் ஈடுப்படுத்தப்படக்கூடாது. சில நாட்களுக்கு முன் யோகா தினத்தில் பாய் விரிக்கும் பணிக்கு எல்லாம் ராணுவத்தினர் அழைக்கப்பட்டார்கள்” என்று ஆதங்கமாக தனது கருத்துக்களை தெரிவித்தார்.

இவ்வாறாக முன்னாள் ராணுவத்தினர் பலரும் நிர்மலா சீதாராமன் கருத்துக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களின் இந்த கருத்துக்கு பாதுகாப்பு துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.