
பொதுவாக, ஹீரோக்களைவிட ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவகவே இருக்கும். ஸ்ரீதேவி, விஜயசாந்தி, போல ஹீரோக்களைவிட அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின்கள் உருவாவது எப்போதுதான். அந்த அரிய வரிசை பட்டியலில் சேர்ந்திருக்கிறார் நடிகை தீபிகா படுகோன்..
பத்மாவதி படத்திற்காக தீபிகா படுகோன் 13 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருப்பதாக மும்பை மீடியாக்கள் மாய்ந்து மாய்ந்து செய்தி வெளியிடுகின்றன. இதே படத்தில் நடித்துள்ள ஹீரோக்கள் ரன்வீர் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி மட்டுமே சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளதாம்.
ஆனால், நடிகை தீபிகா படுகோனே, சம்பள விஷயத்தை பற்றி கேட்டால், புன்னகையோடு நிறுத்திவிடுகிறார்.
Patrikai.com official YouTube Channel