4955476088_ccc920be5e_o.0

மெட்ரிக் அளவுகோள் முறைக்கு அமெரிக்கா மாறணும்

வாஷிங்டன்:
அடி, மைல், பவுண்ட்ஸ், கேலான்கள் போன்ற அளவுகோள்களுக்கு முன்பு உள்ள மெட்ரிக் முறை. இந்த முறையை பயன்படுத்த அமெரிக்க தயக்கம் காட்டி வந்தது. மெட்ரிக் முறைக்கு மாற்ற 1970ம் ஆண்டு அமெரிக்கா எடுத்த முயற்சிஅரசியல் காரணங்களால் கைவிடப்பட்டது. அடுத்து 1975ம் ஆண்டில் பெரும்பாலான நாடுகள் மெட்ரிக்  முறைக்கு மாறியபோது அமெரிக்காவும் முயற்சித்தது. இதற்காக மக்களுக்கு பயிற்றுவிக்க தனி வாரியமே தொடங்கியது. ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது.
மெட்ரிக் முறை சாத்தியமற்றது என்று அப்போது கூறப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இது உண்மையில்லை. மெட்ரிக் அளவு முறை என்பது வலுவான ஒரு முறையாகும். பொருளாதார உலகமயாக்களில் அமெரிக்காவில் உள்ள அளவுகோள் முறை அந்நாட்டுக்கு பின்னடைவை ஏற்படுத்துக்கிறது. எந்த விதமான அளவை கணக்கிடவும் மெட்ரிக் அளவு கோள் எளிதானதாகும். கம்ப்யூட்டர் மூலமாக கணக்கீடுக்கும் மெட்ரிக் முறையே சரியானதாக இருக்கும் என நிரூபனமாகியுள்ளது.
அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக இந்த முறை அமல்படுத்தவில்லை என்றாலும், அறிவியல், சுகாதாரம், எரிசக்தி, கார் தயாரிப்பு உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் தனிப்பட்ட முறையில் மெட்ரிக் முறைக்கு மாறிவிட்டன. ல்அதனால் மெட்ரிக் அளவு கோள் முறை குறித்த கருத்துக்கள் அதிகரித்து வருகிறது. அதனால் விரைவில் அங்கு மாற்றம் வரும் சூழல் உருவாகியுள்ளது.