டில்லி

ட்டாசு வெடிக்க தடை விதித்த உச்சநீதிமன்றம் எதிரில் ஒரு இந்து அமைப்பினர் பட்டாசு வெடித்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் டில்லி நகருக்குள் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளின் விற்பனைக்கும், பட்டாசு வெடிப்பதற்கும் தடை விதித்து உத்தரவிட்டது.  இது டில்லி வாழ் இந்து மத மக்களிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது.   இதை பல இந்து அமைப்பினர் எதிர்த்து வந்தனர்.

இந்நிலையில் ஆஜாத் ஹிந்து ஃபௌஜ் (சுதந்திர இந்து வீரர்கள்) இயக்கத்தை சேர்ந்த சிலர் சத்பால் மல்ஹோத்ரா தலைமையில் உச்ச நீதி மன்ற வளாகத்திற்கு வெளியே  பட்டாசுகள் வெடித்து தங்கள் எதிர்ப்பை காட்டினர்.  அவர்கள் அனவரும், அதாவது மூன்று பெண்கள் உட்பட மொத்தம் 14 பேரும் கைது செய்யப்பட்டு திலக் மார்க் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஏற்கனவே டில்லியின் ஹரி நகர் பகுதியில் தாஜிந்தர் பக்கா என்னும் பிரமுகர் அங்குள்ள சேரிக்குழந்தைகளுக்கு பட்டாசு வழங்கி உள்ளார்.  அந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=aseap7o-O6g]