தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள புறப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. .
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருடம்தோறும்ம் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி இந்த வருடமும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தலைநகா் சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
@ சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, திருவனந்தபுரம், பண்ருட்டி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோவை, எா்ணாகுலம், கிருஷ்ணகிாி, தருப்பூா், ஓசூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்படும்.
@ பூவிருந்தவல்லியில் இருந்து, ஆற்காடு, ஆரணி, வேலூா், தருமபுாி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
@ தாம்பரம் சேனிட்டோரியத்தில் இருந்து, திண்டிவனம், கும்பகோணம், தஞ்சாவூா் மற்றும் இவற்றை கடந்து செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படும்.
@ சைதாப்பேட்டை பணிமனையில் இருந்து, சிதம்பரம், கடலூா், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு இ.சி.ஆா். மற்றும் ஓ.எம்.ஆா். மாா்க்கமாக பேருந்துகள் இயக்கப்படும்.
@ ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் அண்ணாநகா் மேற்கு பணிமனையில் இருந்து இயக்கப்படும்.
@ தனியார் ஆம்னி பேருந்துகள் நசரத்பேட்டை வழியாக ஊரப்பாக்கம் சென்று அடையவேண்டிய பகுதிகளுக்கு செல்லும்.