டில்லி:
டில்லி தலைமைச் செயலகத்தில் நிறுத்தியிருந்த முதல்வர் கெஜ்ரிவால் கார் திருடுபோயுள்ளது.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தலைமை செயலகம் வந்தார். தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் பணிகளை முடித்துக் கொண்டு அவர் வீடு செல்ல காரை எடுக்கச் சென்ற போது கார் மாயமாகியிருந்தது.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு நிறைந்த டில்லி தலைமை செயலகத்தில் மர்ம நபர்கள் முதல்வரின் காரை திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel