மதுரை,
டெங்கு கொசு பரவாமல் இருக்க வாசலில் சாணம் கரைத்து தெளியுங்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறி உள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தமிழக அரசும் டெங்கு கொசுவை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மதுரையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜு அநத பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆய்வுகள் மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு வராது.. அமைச்சர் செல்லூர் ராஜு, வாசலில் மாட்டு சாணத்தை கரைத்த தண்ணீரை தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என்றார்.
பண்டைய காலத்தில் பின்பற்றப்பட்ட சாணம் தெளிக்கும் முறையை அதற்கான வசதியுள்ள மக்கள் இன்றும் பின்பற்ற வேண்டும் என்றார்.
சாணம் தெளிப்பதன் வீட்டில் கிருமிகளை அண்டவிடாமல் தடுக்கலாம் என்றும் அவர் கூறினார்.
பங்களா வீடுகளில் இதனை பின்பற்ற முடியாது என்ற அவர் கிராமப்புற மக்கள் இந்த முறையை பின்பற்றலாம் என்றார்.
கிராமப்புற பகுதிகளில் பொதுவாக வீட்டின் முன்பு சாணக்கரைசல் மூலமே தண்ணீர் தெளித்து கோலமிடுவது வழக்கம். அதன் காரணமாகவே பூசி, புழுக்கள் வீட்டினுள் வராது.
மாட்டு சாணம் ஒரு கிருமி நாசினி என்பது குறிப்பிடத்தக்கது.