சென்னை:
சசிகலா கணவர் நடராஜன் உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குளோபல் மருத்துவமனையில் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடராஜனை சந்திக்க சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார். இது தொடர்பாக சசிகலா தரப்பு தாக்கல் செய்த ஆவணங்கள் உண்மைதானா? என்பதை கண்டறிய அவை தமிழக டிஜிபி.க்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் உண்மைத்தன்மை இருப்பதை தமிழக காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து சசிகலாவுக்கு பரோல் வழங்கி கர்நாடகா சிறைத் துறை உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரை அழைத்து வர டிடிவி தினகரன் பெங்களூரு விரைந்துள்ளார்.
நாளை பரோலில் வெளியே வரும் சசிகலாவை சென்னை சிறுதாவூர் பங்களாவில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அவர் பரோலில் இருக்கும் காலத்தில் அரசியல் மாற்றம் எதுவும் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
[youtube-feed feed=1]