கண்ணூர்,
கேரளாவில் அரசியல் படுகொலை அதிகரித்துள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டி உள்ளார்.
கேரளாவில் பாரதியஜனதா சார்பில் 15 நாட்கள் பாத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. கேரள அரசை கண்டித்தும், கேரளாவில் பாரதியஜனதா கட்சியை வலுப்படுத்தி ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் இந்த பாத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்த இந்த பாதயாத்திரையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் சொந்த தொகுதியான கண்ணூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உ.பி.முதல்வர் யோகி பேசினார்.
அப்போது, கேரளாவில் அரசியல் படுகொலைகள் அதிகரித்து வருகிறது. இந்து மத தலைவர்கள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் நடைபெறும் அரசியல் படுகொலைகளை கட்டுப்படுத்த இடதுசாரி அரசு தவறிவிட்டதாகவும், இதன் காரணமாக கேரளாவில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாடடினார்.
மேலும், ஜனநாயகத்துக்கு விரோதமாக நடைபெறும் இந்த ஆட்சியை அகற்ற மக்கள் தயாராக வேண்டும் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
உ.பி.முதல்வரின் இந்த பேச்சு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.