மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசுகள் இலக்கியம், கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தோருக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நபர்களைத் தேர்ந்தெடுக்க நார்வேயில் குழு அமைக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும். இந்தக் குழுவில் நார்வே நாட்டைச் சேர்ந்தவர் மட்டுமின்றி உலகின் வேறு பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருப்பார்கள்.
இந்த நிலையில் இந்த வருடத்துக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு இன்று பிறபகல் ( இந்திய நேரப்படி) 3 மணி அளவில் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், நாளை இயற்பியலுக்கும், அக்டோபர் 4-ம் தேதி வேதியல் துறைக்கும் நோபல் பரிசு பெறுவோரின் பெயர் அறிவிக்கப்பட இருக்கிறது.