மேட்டூர்,
கடந்த இரு ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94 அடியை தாண்டியுள்ளது.
இதன் காரணமாக சம்பா சாகுபடிக்காக இன்று அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
கர்நாடகால மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிறைந்துள்ளன.
இதன் காரணமாக அங்கிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் காவிரியில் பாய்ந்தோடி மேட்டூர் வந்தடைகறிது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைய தொடங்கியுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் சரியத் தொடங்கியுள்ளது.
சனிக்கிழமை காலையில் வினாடிக்கு 28 ஆயிரத்து 558 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று வினாடிக்கு 17 ஆயிரத்து 875 கன அடியாக சரிந்தது.
தற்போதைய அணையின் நீர்மட்டம், 94 புள்ளி ஒன்பது மூன்று அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 57 புள்ளி இரண்டு ஆறு டி.எம்.சி.யாக உள்ள நிலையில், வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் விவசாயத்துக்காக திறக்கப்படுகிறது.