பாரிஸ்:

ஃபிரான்ஸ் தென்பகுதியில் உள்ள மார்செய்ல் நகர் செயின்ட் சார்லஸ் சுரங்க ரெயில் நிலையத்தில் இன்று ஒரு மர்ம நபர் அவ்வழியாக கூட்டமாக சென்ற மக்கள் மீது கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இதில் இருவர் பலியாயினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய நபர் யார்?, எதற்காக இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு ஃபிரான்ஸ் உள்துறை அமைச்சர் கெரார்ட் கோல்லம்ப் பார்வையிட்டார். ரெயில் நிலையத்துக்கு அருகில் செல்வதை மக்கள் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இச்சம்பவத்திற்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.