நய்பிய்டா:

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக பவுத்த மதத்தினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நடந்த மோதல் சம்பவங்களை தொடர்ந்து அந்நாட்டு ராணுவம் நடவடிக்கை ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனால் லட்சகணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். மியான்மரின் இந்த நடவடிக்கைக்கு இந்திய அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது. அதோடு ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வர தடை விதித்துள்ளது. உலக நாடுகள் பல மியான்மர் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் மியான்மர் யங்கூனில் உள்ள லட்சுமி கோவிலில் விஜயதஸமி விழா நடந்து வருகிறது. இன்று மதியம் 3 மணியளவில் ஆர்எஸ்எஸ் கிளை அங்கு தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் பலர் கலந்துகொண்டனர்.

சனதன் தர்மா ஸ்வயம் சேவாக் சங்கம் (எஸ்டிஎஸ்எஸ்) என்று அந்த அமைப்பக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதில் சிறுவர் சிறுமியர் பலர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு யோகா மற்றும் உடற்பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் வெள்ளை நிற டீ சர்ட் மற்றும் நீல நிற பேன்ட் சீருடையாக அணிந்திருந்தனர்.