போபால்:
ராஜஸ்தானில் இளம் பெண்ணை 26 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 25-ம் தேதி ராஜஸ்தானின் பிகாநிர் பகுதியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் அவரை காரில் கடத்தி சென்றனர்.
ஒதுக்குபுறமான இடத்தில் பல மணி நேரமாக காருக்குள் வைத்து மாறி மாறி அந்த மர்ம கும்பல் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கடத்திய இடத்திலேயே தூக்கிவீசி விட்டு சென்றுது.
இதைதொடர்ந்து அந்த பெண் பலானா கிராமத்திற்கு அழைத்து சென்ற மற்றொரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்நிலையில் அந்த பெண் நேற்று போலீசில் புகார் செய்தார். தன்னை 26 பேர் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பதிவு எண்கள், சிலரது விவரங்களை போலீசாரிடம் அளித்தார். இதன் அடிப்படையில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
[youtube-feed feed=1]