சென்னை:
ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து நிலைமையை புரிந்துகொள்ளட்டும். அவர்களுக்கு நான் எந்த விதமான எச்சரிக்கையையும் அளிக்கமாட்டேன்’’ என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், ‘‘ என க்கு மார்டின் லூதரை மிகவும் பிடிக்கும். தோல்விக்கு பின் அவர் வெற்றி பெற்றார். அதேபோல் நானும் மீண்டும் வருவேன். அரசியலுக்கு கமல், ரஜினி வருவது குறித்து நான் எவ்வித கருத்தும் தெரிவி க்கமாட்டேன். அவர்கள் அரசியலுக்கு வரட்டும். நான் அவர்களுக்கு எவ்விதமான எச்சரிக்கையும் கொ டுக்கமாட்டேன். அவர்களே வந்து இங்கு உள்ளவற்றை தெரிந்து கொள்ளட்டும்.
அவர்களுக்கு எச்சரிக்கை செய்ய அதிகமான நபர்கள் இருக்கின்றனர். கமல், விஷால் போன்றவர்கள் தற்போது ஊழல் குறித்தும், சிஸ்டம் சரியில்லை என்றும் பேசுகிறார்கள். ஜெயலலிதா இருந்தபோது இவர்கள் எல்லோரும் எங்கே சென்றார்கள். அப்போது ஏன் ஒருவரும் அறிக்கைவிடவில்லை. அவர் ஊழல் ஆட்சியை தான் நடத்தினார். நான் ஒருவன் மட்டுமே ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் எதிர்த்து குரல் கொ டுத்தேன்’’ என்றார்.
‘‘நான் அப்பாவியாக இருப்பதால் அரசியலுக்கு ஒத்துவரமாட்டேன் என்று சிலர் கூறுகின்றனர். ஊழல் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட என்னை போன்று ஒரு நபரும் இருக்க வேண்டும். 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட்ட குமரகுரு வேட்பாளருக்கு ஜெயலலிதா அதிகளவில் செலவு செய்தார். தற்போது எனக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆயிரம், 2 ஆயிரம் ரூபாய்களுக்கு வாக்குகளை விற்றவர்களுக்கு தான் பாதிப்பு.
டெங்கு காய்ச்சலால் சென்னையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சுகாதார துறை அமை ச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து இது வழக்கமான காய்ச்சல் தான் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகிறார். நான் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் உண்மையை அறிவார்கள். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலினுக்கு முன் ஓ.பன்னீர்செல்வம் தான் கூறினார். சிவாஜி கணேசனுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் தான் சிறந்த நடிகர். இந்த விவகாரத்தில் அதிகம் தலையிட விரும்பவில்லை’’ என்றார்.
விஜயகாந்த் தொடர்ந்து கூறுகையில், ‘‘2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம். பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவோம். 234 தொகுதிகளிலும் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டணி இல்லாமலேய நான் வெற்றி பெற்றாலும் ஆச்சர்யப டுவதற்கில்லை. இந்த மாதி இறுதிக்குள் ஆட்சி கலைக்கப்படும் என்று நம்பதகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
துரோகிகள், முதுகெலும்பு இல்லாதவர்கள், பிறகட்சிகளில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தான் தமிழக பாஜக.வில் இருக்கின்றனர். அதனால் வரும் தேர்தலில் பாஜக ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை என க்கு இல்லை. திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே துரோக கட்சிகள். திராவிட இயக்கத்தை பாஜக போன்ற கட்சிகளிடம் அடகு வைத்தவர்கள். இதில் பாஜக.வை குறை கூற எதுவும் இல்லை. மக்களும், அமைச்சர்களும் தான் இதற்கு பொறுப்பு’’ என்றார்.