
சென்னை:
டிடிவி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய சென்னை ஐகோர்ட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அக்டோபர் 3 வரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜி தமிழக போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.95 லட்சம் பணமோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் இன்றைய விசாரணையின்போது, அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க கோரப்பட்டது.
அதை ஏற்ற சென்னை உயர்நீதி மன்றம், விசாரணையை அக்டோபர் 3-க்கு ஒத்திவைத்தது. அதுவரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel