நெர்கண்டி,
ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே வட இந்தியாவில் ரெயில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை ஒடிசா மாநிலம் நெர்கண்டி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் வந்தபோது ரெயிலின் 16 பெட்டிகள் ரயில் தண்டவாளத்திலிருந்து விலகி சென்று கவிழ்ந்தது.
இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் விரைவு ரயில்கள் உட்பட மற்ற ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்றுவருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து, அதிகாலை 4 மணியளவில் நடந்தது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.