
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டோக்யோ உலக திரைப்பட விழாவுக்கு தமிழில் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் தேர்வாகி உள்ளது.
ஓரம்போ’, `வா குவார்ட்டர் கட்டிங்’ ஆகிய படங்களை தொடர்ந்து புஷ்கர் – காயத்ரி இணைந்து இயக்கியுள்ள படம் ‘விக்ரம் வேதா’.
மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக மாதவனும், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்க்ஸ்டராக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். அவர்களுடன் வரலட்சுமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், பிரேம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இந்தி மொழிமாற்றத்துக்கான உரிமையை பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பெற்றுள்ள நிலையில், தற்போது டோக்யோ திரைப்பட விழாவுக்கும் தேர்வாகி இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டோக்யோ திரைப்பட விழா அக்டோபர் தம் 25ந்தேதி முதல் நவம்பர் 3ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் உலகின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதில் 6 படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும்.
[youtube-feed feed=1]