டார்ஜிலிங்

னி மாநிலம் கேட்டு வேலை நிறுத்தம் செய்த கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோளை ஏற்று வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டது.

கூர்க்கா இன மக்களின் அமைப்பு கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா.  இந்த அமைப்பு தங்களுக்கு கூர்க்காலாந்து என  தனி மாநிலம் தேவை என பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை.  இதைத் தொடர்ந்து டார்ஜிலிங்கில் அந்த அமைப்பு கடந்த ஜுன் 15 முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.  தொடர்ந்து வேலை நிறுத்தம் நடை பெற்று வருகிறது.  முதலில் டார்ஜிலிங் பகுதியில் மட்டும் தொடங்கிய வேலை நிறுத்தம் கடந்த ஒரு வாரமாக பல பகுதிகளிலும் பரவி உள்ளது.

இந்நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் நேற்று ஒரு அறிக்கை விடுத்தார்.  அதில், “கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவின் தனி மாநில கோரிக்கை பரிசீலிக்கப் படும்.  ஜனநாயக முறைப்படி இந்த கோரிக்கை கலந்து பேசித்தான் ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும்.   உடனடியாக வேலை நிறுத்தம் கைவிடப்பட்டு பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

அதையொட்டி கூர்க்கா ஜன் முக்தி மோர்ச்சா தங்களின் வேலை நிறுத்தத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.   இதை அந்த அமைப்பின் தலைவர் குருங் அறிவித்துள்ளார்.   கடந்த ஜூன் மாதம் 18 முதல் டார்ஜிலிங் பகுதியில் நிறுத்தப் பட்டிருந்த இணைய சேவை தற்போது அங்கு சகஜ நிலை அடைந்ததால் மீண்டும் துவங்கப் பட்டுள்ளது.