ஜகர்தா:

இந்தோனேசியாவின் பாலி தீவு பகுதியில் உள்ள சுற்றுலா மையமான குட்டாவில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ளது ஆகுங் என்ற எரிமலை. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த எரிமலை எரிந்து கொண்டிருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில் முதன் முறையாக இந்த எரிமலை வெடிப்பதற்கு ஆயத்தமாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் 60 ஆயிரம் மக்கள் வசித்து வந்தனர். இதில் 48 ஆயிரத்து 540 பேர் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர் என்று பேரிடர் முகமை தெரிவித்துள்ளது. இவர்கள் உறவினர்கள் வீ டுகள் மற்றும் மறுவாழ்வு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 2 ஆயிரம் மாடுகளும் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. அதோடு சிலர் அங்கிருந்து வெளியேறாமல் தொடர்ந்து வசித்து வருகின்றனர். அவர்கள் பன்றிகள், கோழிகள் போன்றவற்றை அதிகளவில் வளர்த்து வருவதால் அவற்றை விட்டுவிட்டுச் செல்ல மனமில்லாமல் உள்ளனர். இதற்கு முதல் காரணம் இது வரை இந்த எரிமலை வெடித்தது கிடையாது. அதோடு தங்களது வாழ்வாதாரம் குறித்த கவலை காரணமாக இடம்பெயறாமல் உள்ளனர்.

கடந்த 22ம் தேதி அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் 5.6 மைல் தூரம் தள்ளி இருக்குமாறு கேட் டுக் கொண்டது. இந்தோனேசியாவில் ஆகுங் உள்பட 120 எரிமலைகள் உள்ளன. கடந்த 1963ம் ஆண்டு எரிமலை வெடித்ததில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தலைநகரான ஜகர்தா வரை சாம்பல் படலம் இரு ந்தது.

பாலி பல்வேறு நாடுகளின் லட்சகணக்கான சுற்றுலா பயணிகளை ஆண்டுதோறும் ஈர்த்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள எரிமலையின் குமுறலால் சுற்றுலாவை நம்பியுள்ள பொருளாதாரம் வெகுவாக பாதித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வரை பாலிக்கு விமானங்கள் வந்து செல்கின்றன. சுற்றுலாவுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. எனினும் தற்போதைய சூழ்நிலையில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலா பயண திட்டத்தை ரத்து செய்து வருவதாக டிராவல் ஏஜென்ட்கள் தெரிவித்துள்ளனர்.